வேதஅறிவிப்பின் (வஹீ) துவக்கம்
ஸஹீஹுல் புகாரீ : 1
0:00 / 0:00
1 - كتاب بَدْءِ الْوَحْيِ
قَالَ الشَّيْخُ الإِمَامُ الْحَافِظُ أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ ابْنِ إِبْرَاهِيمَ بْنِ الْمُغِيرَةِ الْبُخَارِيُّ رَحِمَهُ اللهُ تَعَالَى آمِينَ:
(1)كَيْفَ كَانَ بَدْءُ الْوَحْيِ إِلَى رَسُولِ اللّه ^
وَقَوْلُ اللهِ جَلَّ ذِكْرُهُ ﴿إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ﴾)النساء(163:
1 - حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، عَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِي اللهُ عَنْهُ عَلَى الْمِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ^ يَقُولُ: إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِىءٍ مَا نَوَى؛ فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ.
வேதஅறிவிப்பின் (வஹீ) துவக்கம்1
முன்னோடி அறிஞரும் நபிமொழி மேதையுமான அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயீல் பின் இப்ராஹீம் பின் அல்முஃகீரா அல்புகாரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:2
பாடம் : 1
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) எவ்வாறு துவங்கிற்று?
புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்:
“(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வேதஅறிவிப்புச் செய்ததைப் போன்றே உமக்கும் வேதஅறிவிப்புச் செய்துள்ளோம். (4:163)3
1.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எண்ணத்தைப் பொறுத்தே செயல் கள் அமைகின்றன. ஒவ்வொரு மனித ருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ஆகவே, எவரது ‘ஹிஜ்ரத்’ (புலம் பெயர்தல்) அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்.4
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தவாறு அறிவித்தார்கள்.
குறிப்பு:
of