உளூச் செய்வது

ஸஹீஹுல் புகாரீ : 162

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلْ فِي أَنْفِهِ ثُمَّ لِيَنْثُرْ، وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ، وَإِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلْيَغْسِلْ يَدَهُ قَبْلَ أَنْ يُدْخِلَهَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ "".
பாடம் : 26 கற்களால் சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாகச் செய்தல்
162.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை)ச் சிந்தட்டும். மலஜலம் கழித்து விட்டுக் கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும்.

உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால், அவர் தாம் அங்கத் தூய்மை செய்யப்போகும் தண்ணீருக்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையைக் கழுவிக்கொள்ளட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் இரவில் (உறங்கும் போது) தமது கை எங்கே இருந்தது என்பதை அறியமாட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

of