நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
மூவருக்கு இரட்டை நன்மைகள் அளிக்கப்படும். அவர்கள்:
1. ஒருவரிடம் அடிமைப் பெண் இருந்தாள். அவளுக்கு அவர் கல்வி கற்பித்தார்; அதையும் செம்மையாகச் செய்தார்; அவளுக்கு ஒழுக்கம் கற்பித்தார். அதையும் செய்மையாகச் செய்தார். பிறகு அவளை (விடுதலை செய்து) தாமே மணமுடித்துக்கொண்டார். அவருக்கு இரட்டை நன்மைகள் கிடைக்கும்.
2. வேதக்காரர்களில் (ஏக இறையை) நம்பியவர். அவர் (தம்) இறைத்தூதரை நம்பினார்; பிறகு (இறுதித் தூதரான முஹம்மத்) நபி (ஸல்) அவர்களையும் நம்பினார். அவருக்கும் இரட்டை நன்மை கள் கிடைக்கும்.
3. இறைவனின் கடமையையும் நிறைவேற்றி, தன் எஜமானுக்கும் நலம் நாடுகின்ற அடிமை.
அறிவிப்பாளர் ஸாலிஹ் பின் ஹை (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த நபிமொழியை எனக்கு அறி வித்த) ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘(கட்டணம் ஏதுமின்றி இதை நான் உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். இதைவிட சின்ன விஷயங்களை அறிந்துகொள்ள சிலர் மதீனாவரைகூட பயணம் சென்றுகொண்டி ருந்தார்கள்” என்று கூறினார்கள்.125