தூய்மை தொடர்பான நபிமொழிகள்

ஜாமிஉத் திர்மிதீ : 1

1 - كِتَابُ الطَّهَارَةِِ عَنْ رَسُولِ اللّهِ ^

(1) بَاب مَا جَاءَ لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ

1 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ ابْنِ حَرْبٍ ح، و حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ^ قَالَ: لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ، وَلاَ صَدَقَةٌ مِنْ غُلُولٍ.

قَالَ هَنَّادٌ فِي حَدِيثِهِ: إِلاَّ بِطُهُورٍ.

 قَالَ اَبُوْ عِيْسٰى: هذاَ الْحَدِيثُ أَصَحُّ شَيْءٍ فِي هذاَ الْبَابِ وَأَحْسَنُ.

 وَفِي الْبَاب عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، وَأَبِي هُرَيْرَةَ، وَأَنَسٍ.

وَأَبُو الْمَلِيحِ بْنُ أُسَامَةَ اسْمُهُ: عَامِرٌ، وَيُقَالُ: زَيْدُ بْنُ أُسَامَةَ ابْنِ عُمَيْرٍ الْهُذَلِيُّ.


அத்தியாயம் - 1

தூய்மை தொடர்பான நபிமொழிகள்1


பாடம் : 1

தூய்மையின்றி எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது என்பது குறித்து வந்துள்ளவை2

1.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தூய்மையின்றி எந்தத் தொழுகையும் (இறைவனிடம்) ஏற்கப்படாது; மோசடிப் பொருளால் செய்யப்படும் எந்தத் தர்மமும் ஏற்கப்படாது.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஹன்னாத் பின் அஸ் ஸரிய்யீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தூய்மையுடன் தவிர எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது’’ என்று காணப்படுகிறது.

- அபூஈசா திர்மிதீ கூறுகிறேன்:4

இந்த ஹதீஸ், இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ்களிலேயே மிகவும் ஆதாரபூர்வமானதும் அழகானதும் ஆகும்.5

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், தந்தை (உசாமா) வழியாக அபுல்மலீஹ் (ரஹ்) அவர்களிடமிருந்தும் அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி) ஆகியோரிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.6

அபுல்மலீஹ் (ரஹ்) அவர்களின் தந்தையின் பெயர் உசாமா பின் உமைர் (ரலி) என்பதாகும்.

அபுல்மலீஹ் அவர்களின் இயற்பெயர் ஆமிர் என்பதாகும்; ஸைத் பின் உசாமா பின் உமைர் அல்ஹுதலீ என்றும் சொல்லப்படுகிறது.

of