தூய்மை

சுனனுந் நஸாயீ : 1

1-كِتَاب الطَّهَارَةِ

(1) تَأْوِيلُ قَوْلِهِ عَزَّ وَجَلَّ ﴿إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاَةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ﴾

١ -  أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ ^ قَالَ إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلاَ يَغْمِسْ يَدَهُ فِي وَضُوئِهِ حَتَّى يَغْسِلَهَا ثَلاَثًا فَإِنَّ أَحَدَكُمْ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ.


பாடம் : 1

‘‘நீங்கள் தொழுகைக்காக ஆயத்தமாகும் போது, உங்கள் முகங்களையும் முழங்கைகள் உள்பட உங்கள் கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்’’ (அல்குர்ஆன் 5:6) எனும் இறைவசனத்திற்கான விளக்கம்

1.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

‘‘உங்களுள் எவரும் உறங்கி எழுந்தால், மூன்று முறை தம் கையைக் கழுவும் முன் ‘உளூ’ செய்யும் நீரில் கையை இடவேண்டாம். ஏனெனில், உங்களுள் ஒருவர் இரவு நேரத்தில் தமது கை (உறங்கும்போது) எங்கெல்லாம் பட்டது என்பதை அறியமாட்டார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.1

of