தொழுகை (தொடர்பான நபிமொழிகள்)
முவத்தா மாலிக் : 1
0:00 / 0:00
مُوَطَّأُ الْإِمَامِ مَالِكٍ
وُقُوتُ الصَّلَاةِ
1 - حَدَّثَنَا الْفَقِيهُ أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بْنُ فَرَجٍ - رَضِيَ اللهُ عَنْهُ - قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ فِي مَسْجِدِهِ بِقُرْطُبَةَ فِي صَدْرِ رَبِيعٍ الْآخِرِ سَنَةَ أَرْبَعٍ وَتِسْعِينَ وَأَرْبَعِمَائَةٍ قَالَ : حَدَّثَنَا الْقَاضِي أَبُو الْوَلِيدِ يُونُسُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مُغِيثٍ قَاضِي الْجَمَاعَةِ بِقُرْطُبَةَ الْمَعْرُوفُ بِابْنِ الصَّفَّارِ - رَحِمَهُ اللهُ - قَالَ : حَدَّثَنَا أَبُو عِيسَى يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ أَبِي عِيسَى ، عَنْ عَمِّ أَبِيهِ عُبَيْدِ اللهِ بْنِ يَحْيَى ، عَنْ أَبِيهِ - يَحْيَى ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا ، فَدَخَلَ عَلَيْهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ، فَأَخْبَرَهُ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا وَهُوَ بِالْكُوفَةِ ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ فَقَالَ مَا هَذَا يَا مُغِيرَةُ؟ أَلَيْسَ قَدْ عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ نَزَلَ فَصَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ : بِهَذَا أُمِرْتُ ، فَقَالَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ : اعْلَمْ مَا تُحَدِّثُ يَا عُرْوَةُ ، أَوَ إِنَّ جِبْرِيلَ هُوَ الَّذِي أَقَامَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقْتَ الصَّلَاةِ
- قَالَ عُرْوَةُ : كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيُّ يُحَدِّثُ عَنْ أَبِيهِ قَالَ عُرْوَةُ : وَلَقَدْ حَدَّثَتْنِي عَائِشَةُ زَوْجُ النَّبِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ تَظْهَرَ .
பாடம் : 1
(ஐவேளை) தொழுகை நேரங்கள்
1.
இப்னு ஷிஹாப் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்)) அவர்கள் கூறியதாவது:
(வலீத் பின் அப்தில் மாலிக் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் (அஸ்ர்) தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் வந்த உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்.
(முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியில் இராக் நாட்டில்) கூஃபா நகரின் ஆளுநராக இருந்த முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் ஒரு நாள் (அஸ்ர்) தாமதப்படுத்திவிட்டார்கள். அப்போது அவர்களிடம் அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர்) அல்அன்சாரி (ரலி) அவர்கள் வந்து, “என்ன இது (ஏன் தாமதம்), முஃகீராவே! (தொழுகை கடமையாக்கப்பட்ட ‘மிஅராஜ்’ இரவுக்கு அடுத்த நாள்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி வந்து (லுஹ்ர்) தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவ்வாறே லுஹ்ர்) தொழுதார்கள். பிறகு (ஜிப்ரீல் (அலை)) அவர்கள் (அஸ்ர்) தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (அஸ்ர்) தொழுதார்கள். பிறகு (ஜிப்ரீல் (அலை)) அவர்கள் (மஃக்ரிப்) தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (மஃக்ரிப்) தொழுதார்கள். பிறகு (ஜிப்ரீல் (அலை)) அவர்கள் (இஷா) தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (இஷா) தொழுதார்கள்.
பிறகு (மறுநாள் காலையில் ஜிப்ரீல் (அலை)) அவர்கள் (ஃபஜ்ர்) தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (ஃபஜ்ர்) தொழுதார்கள். (ஐங்காலத் தொழுகையையும் முடித்த) பிறகு (ஜிப்ரீல் (அலை)) அவர்கள், “இவ்வாறே (ஒவ்வொரு நாளும் தொழ வேண்டுமென) நீங்கள் கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்” என்று (கூறியதெல்லாம்) தாங்கள் அறிந்திருக்கவில்லையா என்ன?” என்று கேட்டார்கள்.
(இதைச் செவியுற்ற ஆளுநர்) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், “நீங்கள் என்ன அறிவிக்கிறீர்கள் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள், உர்வா! ஜிப்ரீல் (அலை) அவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தைக் காட்டினார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “(ஆம்) இவ்வாறுதான் பஷீர் பின் அபீமஸ்ஊத் (ரலி) அவர்கள் தம் தந்தை அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்புச் செய்வார்கள் என்று பதிலளித்தார்கள்.
of